Showing posts with label WPI Album. Show all posts
Showing posts with label WPI Album. Show all posts
அண்மையில், சென்னையை நிலைகுலைய வைத்த வர்தா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியின் சின்னகாவனம், குன்னாமஞ்சேரி, வெள்ளோடை, எட்டியம்மன் தெரு போன்ற பகுதிகளை வெல்பேஃர் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர் பார்வையிட்டார். 

மக்களின் தற்போதைய நிலைமை மற்றும் அரசு உதவிகள் சம்பந்தமாக கேட்டறிந்த தலைவர் சிக்கந்தர், பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்கள் அரசால் புறக்கணிக்கப்பட்டிருப்பதை அறிந்து வேதனையடைந்தார். உடனடி உதவியாக பொன்னேரி பகுதி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொருப்பாளர் அப்துல் ஹமீது தலைமயில், சமூக ஆர்வலர் எண்ணூர் ஷேக் மஹ்பூப் பாஷா முன்னிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்தார். 

அத்துடன் பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தகுந்த ஏற்பாடுகளைச் செய்து தருவதாக தலைவர் எஸ்.என்.சிக்கந்தர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதியளித்தார். அது சம்பந்தமான ஒளிப்படத் தொகுப்பு இது.